
( இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திர கோச மங்கை என்கிற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வாமியைப் பற்றியது. நேரம் கிடைத்தால் போய்ப் பாருங்கள்.எனக்கு அற்புத தரிசனம் கிடைத்தது. ஆதிரை அன்று விசேஷம்)
தஞ்சை பெரிய கோவில் III கங்கை கொண்ட சோழேஸ்வரம் . அது போல, ராமேஸ்வரம் கோவில் III உத்தர கோச மங்கை திருக் கோவில்.
-- -000000000000000---
ராகம்: கரகரப்ரியா தாளம் : ஆதி
விருத்தம்
உத்தர கோச மங்கை உறையுள்
ரெத்தின சபையின் தெரிசனமின்றி,
வித்தகன் ஆடிய விந்தை அறியா,
அந்தகன் போல் நான் வாழ்ந்திருந்தேன்.
----
பல்லவி
ஆட்டத்தை யாரறிவார்? ஐயனின்
ஆட்டத்தை யாரறிவார்....
--ஆட்
அனுபல்லவி
மங்கள நாதனின் அற்புத அழகில்
திங்களை சூடிய ஆடிய பாதத்தின்..
-- ஆட்
சரணம்
சித்தரும் போற்றும் சிவ திருப்பதியாம்
உத்தர கோச மங்கையூரில்,
நர்த்தனமாடும் கணபதி சூழ,
அர்த்தமுடன் ஐயன் ஆடுகின்றான்
-- ஆட்
------
உத்தர கோச மங்கைக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம்.அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.பாடல் கேட்கத்தெரியும். தமிழ் அனுபவிக்கத் தெரியும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉத்தரகோச மங்கை ஈசனின் நர்த்தனத்தை உங்கள் வரிகள் உணர்த்துகின்றன.(அனுபல்லவியில் 'மங்கள நாதனின் அற்புத அழகில்' தாளக் கட்டு சரி வருமா? 'அழகினில்' என்றால் சரி வருமா?)
ReplyDeleteஎழுத்தாளர் கந்தர்வன் ஒரு சிறுகதையில் உத்தரசகோச மங்கை பற்றி எழுதியிருப்பார். திருவாசகத்தில் படிக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எழும். ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டீர்கள். நன்றி
ReplyDelete