Monday, June 13, 2011

குரு நாதர் துணை!!!


பாடல் புனைந்த இடம் : கர்ப்பகிருஹம் குருநாதர் ஸ்வயம்ப்ரஹாஸ ஸ்வாமிகள் ஸன்னிதி
பாடல் புனைந்த நேரம் : காலை பத்து மணி முதல் பத்தரை வரை..
பாடல் புனைந்த நாள் : 17.12.1998 வியாழக் கிழமை.

[ஐம்பதாவது குரு நாதர் ஆராதனை. அறுபது வருடங்களுக்கு ஒரு முறை தான் வியாழனன்று (குரு வாரம்) ஆராதனை வரும்..17.12.1998 வியாழன்று ஆராதனை வெகு விமர்சையாக நடந்தது.என் மாமனார் ஆதிகுடி கிளப் ராமகிருஷ்ண ஐயர்..அவருக்குப் பின் என் மைத்துனர் ஸத்ய வாகீஸ்வரன் & பிரதர்ஸ் அந்த அவதூதருடைய பக்தர்கள்..மைத்துனர் ஸத்யவாகீஸ்வரனுடன் அந்த வியாழனன்று நடந்த ஆராதனைக்கு சென்றிருந்தேன்.அப்போது ஏதோ தோன்ற,இதை எழுதி, அன்னணம் புனையப் பட்ட பாடல் குரு சன்னிதானத்தில் தத்தாத்ரேயர் சன்னிதியில் வைக்கப் பட்டது..ஆராதனை நடந்த இடம், நாமக்கல் சேந்த மங்கலம்..இந்த அவதூதர் புதுக் கோட்டை ஜட்ஜ் ஸ்வாமிகளின் குரு என்று கேள்வி! பாடலைப் பார்ப்போமா?]
ராகம் : ரேவதி தாளம் : ஆதி


பல்லவி
அபயம் அளிப்பாய் நிர்குண வாஸா..
சுந்தர ரூபா..ஸ்வயம்ப்ரஹாஸா...
.......(அபயம்)
அனுபல்லவி
சமய சஞ்சீவி சத்குரு நாதா....
உமையொரு பாகனின் ப்ரிய அவதூதா
.......(அபயம்)
சரணம்
அவயம் அடங்கி அருள்தனை பெறவே..
உபாயம் ஒன்றை உணர்த்திடு குருவே...
.......(அபயம்)

9 comments:

 1. நீங்கள் எழுதிய பாடல் நன்றாக இருந்தது...மஹான்களின் பரிபூர்ண ஆசிகள்தான் உங்களை எழுத வைப்பதாக உணர்கிறேன்....

  ReplyDelete
 2. ராகத்தில் ஒன்றரக் கலக்கும் சாஹித்தியம். நீங்கள் நிறைய எழுதவேண்டும் நண்பரே! இன்று ஒரு கிசுகிசு இந்த வலைப்பூ பற்றி எழுதியிருக்கிறேன் பாருங்கள்

  ReplyDelete
 3. http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..

  ReplyDelete
 4. ஸ்வயம்ப்ரகாச சுவாமிகள், ஜட்ஜ் சுவாமிகளுடைய சீடர்! குரு அல்ல. புதுக்கோட்டையில் தன்னுடைய குருவின் சமாதியை நன்கு பராமரித்து நிர்வகிக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் சாந்தானந்தருக்கு சன்யாசம் கொடுத்ததாக சொல்வார்கள். ஜட்ஜ் சுவாமிகள், அதிஷ்டானம் சாந்தானந்தரால் நன்கு பராமரிக்கப்பட்டதும், சேலம் அருகே ஸ்கந்தாஸ்ரமத்தை நிறுவியதும் தனிக்கதை. சாந்தானந்தர், தத்தகிரியில் பரம குரு ஸ்வயம்ப்ரகாசருடைய சன்னதியைப் புதுப்பித்துப் பராமரித்தார். தத்தகிரிக்குப் பக்கத்திலேயே, ஸ்வயம்ப்ரகாசருடைய இன்னொரு சீடர் கிருஷ்ணானந்தாவுடைய தத்தாச்ரமம் இருக்கிறது.

  நெரூர் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராளுடைய சீட பரம்பரையாக, அவதூத சந்யாசிகளாக இருப்பவர்கள் இவர்கள். தத்தாத்ரேய வழிபாடு இங்கே பிரதானம்., ஸ்வயம்ப்ரகாச சுவாமிகள், ஜட்ஜ் சுவாமிகளுடைய சீடர்! குரு அல்ல. புதுக்கோட்டையில் தன்னுடைய குருவின் சமாதியை நன்கு பராமரித்து நிர்வகிக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் சாந்தானந்தருக்கு சன்யாசம் கொடுத்ததாக சொல்வார்கள். ஜட்ஜ் சுவாமிகள், அதிஷ்டானம் சாந்தானந்தரால் நன்கு பராமரிக்கப்பட்டதும், சேலம் அருகே ஸ்கந்தாஸ்ரமத்தை நிறுவியதும் தனிக்கதை. சாந்தானந்தர், தத்தகிரியில் பரம குரு ஸ்வயம்ப்ரகாசருடைய சன்னதியைப் புதுப்பித்துப் பராமரித்தார். தத்தகிரிக்குப் பக்கத்திலேயே, ஸ்வயம்ப்ரகாசருடைய இன்னொரு சீடர் கிருஷ்ணானந்தாவுடைய தத்தாச்ரமம் இருக்கிறது.

  நெரூர் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராளுடைய சீட பரம்பரையாக, அவதூத சந்யாசிகளாக இருப்பவர்கள் இவர்கள். தத்தாத்ரேய வழிபாடு இங்கே பிரதானம்.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி..திரு எல்லென்,மோஹன்,இராஜராஜேஸ்வரி!

  ReplyDelete
 6. தவறுக்கு வருந்துகிறேன்!
  நன்றி!
  தங்கள் தகவலுக்கும்..வருகைக்கும்!
  ஸ்வாமிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல்..
  இயலுமா?

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. நான் புதுக்கோட்டை புவனேஸ்வரியின் பக்தன். அங்கு செல்லும்போதெல்லாம் ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தை வணங்கி வருவேன்.
  இந்த பதிவில் மனம் குளிர்ந்தேன். நன்றி தங்களுக்கும், திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் .

  ReplyDelete
 9. என் அருட்கவி தளத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்.

  ReplyDelete