Saturday, October 15, 2011

ஆனைக்கா...


(1.1.2000 அன்று கோவை வடவள்ளி ஸ்வாமிஜி செளரிராஜன் அவர்கள் பிறந்த நாள்.அது நடந்த திருமண மண்டபத்தில்(பழைய பக்‌ஷிராஜா ஸ்டுடியோ) புனையப் பட்ட பாடல் இது. அவர்கள் அகிலாண்டேஸ்வரி தேவி உபாசகர். எங்களுக்கெல்லாம் லலிதா திரிசதி சொல்லிக் கொடுத்தவர்)

ராகம் : அடாணா
தாளம் : ஆதி

பல்லவி
ஆனைக்காவிலுறை அகிலாண்டேஸ்வரியை
அனுதினமும் பாட அனுக்ரகம் தர வேண்டும்....
(ஆனை..
அனுபல்லவி
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக,
பாடும் பாக்களுக்கு இதுவே முதலாக.....
(ஆனை..
சரணம்
தேனை சுவைக்கும் இன்பத்தினை, பார்க்கும்
பார்வையில் அருளும் பராசக்தி தாயே-தரன்,
ஊணிலும்,உயிரிலும் உணர்வென நீ கலந்து,
உத்தமனாய் வாழ்ந்து உயர்ந்திட வரம் வேண்டும்.
(ஆனை..

5 comments:

  1. என் இனிய வாசகர்களே...
    என்னுடன் இது நாள்வரை பயணித்த அனைவருக்கும் நன்றி.
    1998லிருந்து 2000 வரை என்னுள் தோன்றிய உணர்வுகள் இவை..இவை பாக்களாக வடிவமைக்க இறைவன் என்னை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டான். அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன்..அவ்வளவு தான்!
    ஆசாபாசங்களிலும்,மாயையிலும் மூழ்கி கிடக்கும் எனக்கு, இனி அவ்விறைவுணர்வு வருமா என்று தெரியவில்லை. வந்தால் அவ்விறைவன் மறுபடியும் என்னை ஒரு கருவியாய் ஆக்கிக் கொள்வான் என்பது திண்ணம்.
    இந்த பாடலின் அனுபல்லவியில் ஈற்றடி ‘ பாடும் பாக்களுக்கு இதுவே முதலாக’ என்று அமைந்துள்ளது.
    ஆனால், இதுவே கடைசி பா ஆகக் கூடாது என்கிற ஆதங்கத்தில், தங்களைப் போலவே, நானும்!
    இறை அருள் இருப்பின் மீண்டும் சந்திப்போம் என்கிற நம்பிக்கையில்,
    விடைபெறுகிறேன்,
    வணக்கம்.

    ReplyDelete
  2. தேனாய் தித்தித்த தீந்தமிழின் இனிமைப்பாடல் முடிவல்ல. ஆரம்பம்பம்தான். வாழ்த்துக்கள்.

    கடலில் அலையும், வாழ்வில் ஆசாபாசமும் இல்லாமல் இருக்காதே.

    அகிலாண்டேஸ்வரியே இரண்டுக்கும்
    கடக்கும் தோணியாவாள்.
    ஏற்றும் ஏணியுமாவாள்.

    ReplyDelete
  3. என் பிரிய மூவார்! எப்படியோ இந்த பதிவை விட்டு விட்டேன். உங்கள் பின்னூட்டம் சற்று அதிர்ச்சி கூட எனக்கு. ஆசையும் பாசமும் மாயையும் அவன் விரிக்கும் வலையல்லவா ! அதில் உழன்றபடியே தான் நாம் கரையேற வேண்டும் . பக்தி இந்த வியாமோகங்களை இறைவன் பால் திருப்பத்தானே சொல்கிறது? அதில் நாமசங்கீர்த்தனத்திற்கு மகத்தான இடம் உண்டு அல்லவா? கீர்த்தனம் எல்லோராலும் எழுதிவிட இயலாது.

    இந்த வாரம் மீண்டும் எழுதத்தொடங்குகிறீர் சொல்லி விட்டேன்!

    இது இந்த சகோதரனின் பிரார்த்தனை, வேண்டுகோள்,கோரிக்கை,கட்டளை என எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

    நேயர் விருப்பம் : ஷண்முகப் ப்ரியாவில் வயலூர் முருகன் மீது ஒரு கீர்த்தனம்.
    விரும்பிக் கேட்டவர்கள் ஹைதராபாத் மோகன்ஜி, கடலூர் மோகன், ஸ்வாமினாதன் மற்றும் மயிலு...

    ReplyDelete

  4. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
  5. அன்புள்ள ஆரண்யநிவாஸ் சார் ,

    வணக்கம் !

    வீடுதிரும்பல் ப்ளாகில் - "வாங்க முன்னேறி பார்க்கலாம் " என்ற பெயரில் வெளிவந்த தன்னம்பிக்கை கட்டுரைகள் இவ்வார இறுதியில் வெற்றிக்கோடு எனும் நூலாக வெளிவருவதை தாங்கள் அறிவீர்கள்.

    இதில் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி - இத்தொடர் ப்ளாகில் வெளிவந்தபோது பின்னூட்டத்தில் நீங்கள் பகிர்ந்த உணர்வுகள் புத்தகத்தின் இறுதியில் வெளியாகிறது. இப்புத்தகத்தில் தங்கள் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி.

    (தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்னூட்டங்கள் மட்டுமே பிரசுரமாகிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும் )

    பிரசுரிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் நம் பெயரை பார்ப்பது ஒரு ஆனந்தம் தானே - அந்த ஆனந்தத்தை பகிரவே இந்த தகவல் !

    தங்கள் அன்பிற்கும் நட்புக்கும் என்றும் நன்றி

    மோகன் குமார்

    ReplyDelete