
ராகம் : கானமூர்த்தே தாளம் : ஆதி
பல்லவி
தாயாய் எழுந்த தயாபரனே...
(தாயாய்...
அனுபல்லவி
மாயாப் பிறவி பிணிக்கு - அரு
மருந்தாய் அமைந்த மஹா தேவா
(தாயாய்....
சரணம்
ஜகத்தில் பிறவி போதும் என
மகப்பேறு பார்த்த மாயக் கூத்தனை
கேட்பது முறையாகுமோ...அம்மா,அது
நகைப்பிற்கு இடம் ஆகுமோ?
(தாயாய்...
பிறவியறுப்பவன் தான். ஆனாலும் அவன் தானே பிறக்கவும் வைக்கிறான். மகப்பேறு பார்த்தவனிடம் பிறப்பறுக்கச் சொல்லலாமா? ஆகா... சிறிய பாடல் ... எவ்வளவு பெரிதாய் விரிகிறது.
ReplyDeleteமாத்ரு தேவோ பவ
ReplyDeleteவெறுமனே தாயானவனாக இல்லாமல் 'தாயும் ஆனவனாக' ஆகி அருள் பாலித்த ஈசனிடம் பிறவி வேண்டாம் என்று கேட்பது முறையில்லைதான் .... அருள் வடிவாய் 'அவன்' இருக்கையில் பிறவி பயம் எதற்கு?
ReplyDeleteதெரியாத ராகம்.. இந்த ராகத்தில் வேறு ஏதாவது பாட்டு இருக்கிறதா>?
ReplyDeleteகான மூர்த்தே என்று தியாகையர் க்ருதி இருக்கிறது அப்பாதுரை ஸார்!
ReplyDelete