
(1.1.2000 அன்று கோவை வடவள்ளி ஸ்வாமிஜி செளரிராஜன் அவர்கள் பிறந்த நாள்.அது நடந்த திருமண மண்டபத்தில்(பழைய பக்ஷிராஜா ஸ்டுடியோ) புனையப் பட்ட பாடல் இது. அவர்கள் அகிலாண்டேஸ்வரி தேவி உபாசகர். எங்களுக்கெல்லாம் லலிதா திரிசதி சொல்லிக் கொடுத்தவர்)
ராகம் : அடாணா
தாளம் : ஆதி
பல்லவி
ஆனைக்காவிலுறை அகிலாண்டேஸ்வரியை
அனுதினமும் பாட அனுக்ரகம் தர வேண்டும்....
(ஆனை..
அனுபல்லவி
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக,
பாடும் பாக்களுக்கு இதுவே முதலாக.....
(ஆனை..
சரணம்
தேனை சுவைக்கும் இன்பத்தினை, பார்க்கும்
பார்வையில் அருளும் பராசக்தி தாயே-தரன்,
ஊணிலும்,உயிரிலும் உணர்வென நீ கலந்து,
உத்தமனாய் வாழ்ந்து உயர்ந்திட வரம் வேண்டும்.
(ஆனை..