Monday, February 28, 2011

சரஸ்வதி துதி!

(ஏதோ ஒரு சரஸ்வதி பூஜை அன்று ஒரு பன்னிரெண்டு வருடங்கள் முன்பு எழுதியது)

ராகம் : தேஷ் தாளம் : ஆதி
பல்லவி

அகலிடைச் சுடர் போல அறிவினைத் தூண்டும்,
சகல கலா வல்லி சரஸ்வதி ........
( அகலிடை..
அனுபல்லவி
புகலிடம் தெரியாமல் தவிக்கின்ற மாந்தருக்கு,
தகுமிடம் தந்து ஆதரிக்கும் தாய் நீயே.....
( அகலிடை..

அகத்தினில் இருக்கும் அழுக்கினைக் களைந்து,
ஜகத்து மனிதர்களின் பிணியினை நீக்கி,
முகத்தில் கண் போல ஒளிர்ந்திடும் அறிவினை,
ககன மழை போல் பொழிந்திடும் வாணி......
( அகலிடை...

2 comments:

  1. அருமை.
    பாடிப் பதிவிடலாமே
    www.arutkavi.blogspot.com

    ReplyDelete
  2. ந்ன்றாக இருக்கிறது. அர்த்தம் பொதிந்த அருமையான்
    வரிகள்.

    ReplyDelete