Tuesday, August 16, 2011

கழுகிற்கு இரையாமோ இப்பிறவி?


ராகம் : ரஞ்சனி தாளம் : ஆதி
பல்லவி

மெழுகிட வேண்டும் மனதினை - அது
ஆண்டவன் உறையும் இடமல்லவா.......
--- மெழுகிட...
அனுபல்லவி
அழுக்கினைக் களைந்து அகந்தையை ஒழித்து,
உருக்கிடும் நெய் போல் மணந்திட வேண்டும்....
--- மெழுகிட....
சரணம்
நழுவிடும் வாழ்வை உணராப் பேதையாய்,
பழகிடும் அன்பினை பணத்தால் வெறுத்து,
அழுகிடும் உடலை ஆசையுடன் பேணி,
கழுகிடம் உணவாய் கொடுப்பது தகுமோ.
--- மெழுகிட....

4 comments:

  1. சிலிர்க்க வைக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. **நழுவிடும்**
    நிஜம் :-(

    ReplyDelete
  3. ராகங்களைப் பற்றி அறியாவிட்டாலும் பாடல்வரிகளிலேயே பரவசம் உள்ளது..! பாராட்டுக்கள் பல..!! வாழ்க வளமுடன்..!!

    ReplyDelete