வினாயகர் துதி
ராகம் : நாட்டை தாளம் : ஆதி
பல்லவி
அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)
அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)
சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)
முதல் வணக்கம்!
ReplyDeleteவேர்ட் வெரிஃபிகெஷன் வேண்டாமே.. பிளீஸ்
ReplyDeleteநன்றி திரு ரிஷபன் அவர்களே!
ReplyDeleteword verification ஐ எடுத்து விடுகிறேன்!
கவிதைக்கென்று ஒரு தளம்.
ReplyDeleteகரும்பு, புகையிலை, இரண்டுமே நமக்குப் பிடித்தாலும்,
விளைவிக்க வெவ்வேறு நிலம் வேண்டியிருக்கிறது தானே?
நஞ்செய்யாய், புஞ்சையாய்!!
வாழ்த்துக்கள்.
நாயகன் = தலைவன்
ReplyDeleteவிநாயகன் = தலைவன் இல்லை
அதாவது, விநாயகனுக்கு மேல் ஒரு தலைவன் அல்லது தெய்வம் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
கிருபானந்த வாரியாரின் “விநாயகர் பெருமை” என்ற
சொற்பொழிவில் கேட்டது.
தரனின் கீர்த்தனாஞ்சலி ஆரம்பமே விநாயகரில் தொடங்குகிறது. வாழ்த்துக்கள்