ராகம் : சஹானா தாளம் : ஆதி
பல்லவி
தாயே நினை நான் சரணடைந்தேன் - தெய்வ
நாயகியே, அம்மையே, உமையே எந்தன் தாயே,
அனுபல்லவி
நாயேன் நற்றமிழினில் நல்ல துதி செய்வதெல்லாம்.....
நோயில் கிடவாமல் ஓர் நொடிக்குள் முடிய வேண்டும் - (தாயே)
சரணம்
ஓயா ஒழிவில்லா அவலத்தில் ஆழ்த்தியென்னை,
பேயாய் அலைக்கழித்த பெருந்துன்பம் போதுமம்மா...
மாயாப் பிறவியின் மயக்கத்தை களைந்தெடுக்க..
சேயாய் கதறுகின்றேன்,செவி மடுத்துக் கேளுமம்மா....
---- (தாயே)
அற்புதம் ராமமூர்த்தி சார்.. பாடிப் பார்த்தேன்.. அழகு!
ReplyDeleteஎனக்கு பாட வராது! படிச்சுப் பார்த்தேன்.. ரிதம் இருந்தது.. சபாஷ்.
ReplyDeleteமோகன்ஜி மிக்க நன்றி! இதெல்லாம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதியது.பத்து வருடங்
ReplyDeleteகளுக்கு முன் எழுதியது. திருவெண்காடு ஜெயராமன்,
ஸ்ரீரங்கம் எம்பார் ராகவ சிம்மன் அவர்க்ளிடம் காட்டி இருக்கிறேன். கொஞ்சம், கொஞ்சமாய் வெளியிடுகிறேன்!
ரிஷபன்,
ReplyDeleteமிக்க நன்றி, சார்!
கற்பூர வாசனை, பூரணமாய் எனக்குக் கூட மணக்கிறது ஆர்.ஆர்.ஆர்.
ReplyDeletevasanக்கு :
ReplyDeleteஅட்டா..என்ன ஒரு பெருந்தன்மை!
//மாயாப் பிறவியின் மயக்கத்தை களைந்தெடுக்க..
ReplyDeleteசேயாய் கதறுகின்றேன்,செவி மடுத்துக் கேளுமம்மா....//
தாயே! நாங்கள் உன் சேயின் ப்ளாக்குகளைத் தொடந்து படித்து ரஸிக்க வேண்டும். எனவே சேயின் கதறலை செவி மடுத்துக் கேளாதே. அவருக்கு நீண்ட ஆயுளும், நா வன்மையும் எழுத்து வன்மையும் தொடர்ந்து தா!!