.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Thursday, November 11, 2010
(இன்று 11.11.2010 சஷ்டி. சூர சம்ஹாரம்...இது
அந்த சிங்கார வேலனுக்காக.....)
ராகம்: ஷண்முகப்ரியா தாளம்: ஆதி
பல்லவி
நித்திரையில் வந்தென் நெற்றிதனில் முத்தமிட்ட
பித்தனவன் பெயர் யாதோ? ----- தோழி
அனுபல்லவி
சேவல் கொடியோனோ..செந்தமிழ் பாலகனோ..
செந்தூர் முருகனோ..சிவ ஷண்முகனோ...
------ நித்
சரணம்
மனத்துள் புகுந்து கொண்ட
மகத்தான மாயவனை...
நினைத்த மாத்திரத்தில்,
நெஞ்சம் கலீரென்று,
சிரித்தென்னை ஆட்கொண்ட,
சிங்கார வேலவனை...
பறித்துக் கொண்டது போல்,
பதைத்து நான் நிற்கின்றேன்.
---- நித்
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா. தேங்ஸ் தேங்ஸ்.நல்லா வந்திருக்கு:)
ReplyDeleteமிகவும் நன்றாக வந்திருக்கிற கீர்த்தனை...hats off!
ReplyDeleteநல்லா இருக்கு ஆர் ஆர் ஆர் .. திரும்பக் கிடைச்சாரா.. எங்களையும் பதைக்க வைச்சிட்டீங்களே..
ReplyDeleteரசமான கீர்த்தனம்
ReplyDeleteவாக்கேய என்றால் என்ன? (வாக்கேயக் காரர்களுக்கு...)
வானம்பாடிகளுக்கு:
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கு நன்றி, ஸார்!
Gopi க்கு,
ReplyDeleteதங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை மேலும்மேலும் எழுதத் தூண்டுகிறது...
Lakshminarayanan க்கு,
ReplyDeleteஇது என்னுடைய இன்னொரு முகம். நீங்கள்
என்னுடைய இன்னொரு ப்லாக் பார்த்திருப்பீர்களே!
betaofbusinessthoughts.blogspot.com இப்படியாகத் தானே அடியேனுக்கு மூன்று முகம்...
அத்தனையும் சொதப்பல் என்று முணுமுணுக்கிறது காதில் விழுகிறது எல்லென்?
நற... நற....
தேனம்மைக்கு:
ReplyDeleteமிக்க நன்றி மேடம். உங்கள் ப்லாக்குக்கு வந்து விமர்சனம் எழுதும் போது, என் பெயருக்குக் கீழ், ’லிங்க்’ கொடுத்து சிரமப் படுத்தி விட்டேனோ...
தவறென்று நினைத்தால மன்னிக்கவும்!
அப்பாதுரைக்கு:
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
வாக்கேய என்றால் என்னவென்று தெரியவில்லை..
TMS...அதாவது, தியாகைய்யர், முத்துஸ்வாமி தீக்ஷிதர்,ஸ்யாமா சாஸ்திரி முதல்.. நடுவில் ஊத்துக்காடு, நம் சுப்ரமணிய பாரதி,கல்கி, கோபால கிருஷ்ண பாரதி ( நந்தன் சரிதம்),பாபநாசம் சிவன்..
ஈற்றாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தஞ்சாவூர் சங்கரய்யர் ..வரை அத்தனை பேரும் வாக்கேயக் காரர்களே !
பாட்டுக்கேக்க மட்டும்தானுங்க தெரியும். படிக்கத்தெரியாதுங்க. என்னமோ, நீங்க எளுதீருக்கீங்க, நல்லாத்தான் இருக்கும்.
ReplyDeleteஇசை ஞானம், இசைக்கருவிகளை வாசிக்கும் ஞானம், கவிதா ஞானம், கதை ஞானம், நகைச்சுவையாகப் பேசும் ஞானம், கருத்துக்களை ருசியாய் எழுத்துக்களில் சமைக்கும் ஞானம் என அந்த ஆறுமுகக் கடவுள் அருளால் தங்களுக்கும் பல முகங்கள் பிரதிபலிக்கின்றன. ஞான சூன்யமான (என்னைப்போன்ற) சூரர்களை சம்ஹாரம் செய்வதாகவே உள்ளது உங்களின் இந்தப் படைப்பு. எவ்வாறு கருத்து சொல்வது என்று தெரியாமல் படத்திலுள்ள ஆட்டுக்கடா போல விழித்தபடி ஏதோ எழுதுயுள்ளேன். மன்னித்தருள வேண்டும் மஹாப் பிரபோ!
ReplyDelete'வாக்கேய' இன்னும் புரியவில்லை. ஏய என்றால் ஏற்புடைய என்று பொருள். வாக்கு+ஏய என்றிருக்குமோ? நான் கேள்விப்படாத சொல் என்றாலும் வாக்கேய பிடித்திருக்கிறது. நீங்க சொன்னதை அப்படியே எடுத்துக்குறேன் :)
ReplyDeleteபாட்டின் கருத்தை வைத்துப் பார்க்கும் பொழுது செஞ்சுருட்டி அல்லது மோகன ராகம் பொருந்துமோ?
ReplyDeleteகந்தசாமி சாருக்கு..
ReplyDeleteமிக்க நன்றி ஐயா....
வை.கோ. சாருக்கு..
ReplyDeleteநரஸ்துதி வேண்டாமே, சார் !!!
உடல் உபாதைகளுக்கும், ராக ஆலாபனைக்கும் உள்ள தொடர்பு அறிவேன்..மன நிலைக்கும்..ராகத்திற்கும் சம்பந்தம் உண்டு. சுகமா..சுகமா..என்று கேட்டுக்கொண்டே வருமாம் கமாஸ்!பாட்டின் மையக் கருத்திற்கும்..அதில் set செய்யப்பட்டுள்ள ராகத்திற்கும் ஒரு பொருத்தம் இப்போது தான் கேள்விப் படுகிறேன்..
ReplyDeleteமிக்க நன்றி, அப்பாதுரை சார்..