.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Saturday, December 11, 2010
விஷ்ணு துதி!
(இன்று ஸ்ரீரங்கத்தில் ஐந்தாம் நாள் பகல் பத்தாக்கும். அரங்கனை காணத்தான்
வாருங்களேன்)
ராகம் : சாரங்கா தாளம் : ஆதி
பல்லவி
அரங்கனைக் காண வாருங்கள்...
அற்புத தரிசனம் பாருங்கள்....
..அர
அனுபல்லவி
அள்ளிக் கொள்ளும் அழகில்,
அகண்ட காவிரியில்....
பள்ளி கொண்டான்
பெருமாள்....பாருங்கள்..
..அர
சரணம்
அலைகடல் ஓரம் அணங்கினை மீட்க,
அயர்ந்தது தர்ப்ப சயனத்திலோ?
தளை தனில் இருந்து பக்தனைக் காக்க,
சாய்ந்தது சர்ப்ப சயனத்திலோ? ..அர
Subscribe to:
Post Comments (Atom)
ராப்பத்து பகல்பத்துக் காலங்களையெல்லாம் காற்றின் போக்கில் அடித்துச் செல்லும் இலை போல போகும் இந்த வாழ்வின் அத்தியாயங்களில் இழந்துவிட்டேன் ஆர்.ஆர்.ஆர். சார்.
ReplyDeleteஅருமையான ’சாரங்கா’வில் ’வாரங்கா’ என்றழைத்தால் வராமல்ல போய்விடுவான் ரங்கன்?
கடைசி வரி வராமலா போய்விடுவான் ரங்கன்?
ReplyDeleteம்ம். நல்லாருக்கு சார்.
ReplyDeleteஆரபி ராகத்திலும்
ReplyDeleteஅபாரமாகப் பொருந்துகிறதே !
ஒரு முயற்சி செய்து பார்த்தேன்.
ஆங்கரையான் நான். பாடகன் அல்ல. குரல் வளம் எழுபது வயதில் முடியாத காரியம்.
சாரீரமும் கிடையாது. உத்சாகம் தான் உள்ளது.
கர்னாடக சங்கீதத்தில் நான் ஒரு க்ராமேரியன்.அவ்வளவு தான்.
எனது சங்கீத வலை :
http://movieraghas.blogspot.com
சங்கீதம் எங்கள் குடும்ப ரத்தம். அது ஒன்று தான்.
பற்கள் எல்லாம் போன முதியவன் நான்.
வலையில் காணும் நல்ல கவிதைகள் , பாடல்கள் பலவற்றினை
எனக்குத் தோன்றிய ராகத்தில் இட்டு வருவது எனது பொழுதுபோக்கு.
வணிக நோக்கு எதுவும் இல்லை.
உங்கள் பாடலை சிறிது நேரத்தில் யூ ட்யூபில் போட்டு, எங்கள் வலைப்பதிவில் காணலாம்.
உங்கள் அனுமதி இல்லையென்றால் தெரிவிக்கவும். அழித்துவிடுகிறேன்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspsot.com
VISIT SUBBU THATHA GANA SABHA @
http://movieraghas.blogspot.com
சுந்தர்ஜிக்கு: சாரங்காவில் வா ரங்காவா?
ReplyDeleteபலே..பலே!!
வானம்பாடிகளுக்கு: மிக்க நன்றி,சார்!
ReplyDeleteசூரி சாருக்கு:
ReplyDeleteஇந்த உலகில் நான் எடுத்துக் கொண்டு வந்தது எதுவும் இல்லை..கொண்டு போகப் போவதும் எதுவும் இல்லை..எதுவும் என்னுடையதும் இல்லை.. நான் ஒரு கருவி..எல்லாப் பாடலும் அந்த பாட்டுடைத்தலைவனுக்கே!இந்த லட்சணத்தில் என் அனுமதி எதற்கு?
இனி இது உங்களுடையது..ஒவ்வொரு தடவையும் கேட்க வேண்டாமே ப்ளீஸ்!
காளிங்க நர்த்தனம் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்கிற ஆவலில் U TUBEல் போட்டு
பார்த்தேன்,கிடைக்கவில்லை!
அது சரி..என்னுடைய ராமமூர்த்தி ப்லாக்கில்
உங்களுக்கான கேள்வி ஒன்று காத்திருக்கிறது.
தயை கூர்ந்து பார்க்கவும்.
அருமையான வைகுண்ட ஏகாதசி சந்தர்ப்பத்தில் அற்புதமானவொரு கீர்த்தனை !!
ReplyDeleteஎனக்கு பாட வராது என்கிற குறை இப்போது சற்று கூடுதலாகவே.. ம்ம்.. நல்ல கீர்த்தனை
ReplyDeleteராகத்தோடு பாடி இணைத்து விடுங்களேன் சார்,
ReplyDeleteபாடிப் பார்த்தேன். நன்றாக வருகிறது.
ReplyDelete