.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Thursday, December 23, 2010
சுபபந்துவராளியில் ஒரு கீர்த்தனை!
ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி
ஏன் இந்த மெளனம் ஸ்வாமி - ஏழை
எந்தனுக்கு அனுக்ரஹம் புரிய இன்னும்
--ஏன்
அனுபல்லவி
பாவி நான் பட்ட துன்பம் போதுமிந்த நானிலத்தில்
ஆவி அடங்குமின்னே ஆட்கொள்ள வேண்டுமையா..
-- ஏன்
சரணம்
ஏய்த்துப் பிழைக்குமிந்த மானிடரின் மத்தியிலே,
அன்புடன் அரவணைத்து ஆதரிக்க ஆருமில்லை..
அர்த்தமில்லா வாழ்க்கை வாழ்ந்தினிப் பயனில்லை,
ஆண்டவனே உனையன்றி உற்ற துணை யாருமில்லை
-- ஏன்
Subscribe to:
Post Comments (Atom)
shanmughapriya raagathileyum nandrakave varukirathu.
ReplyDeletesubbu rathinam.
http://movieraghas.blogspot.com
கீர்த்தனை நன்றாக அமைந்துள்ளது. ஆனால், உங்கள் கதைகளில் காணப்படும் உற்சாகம் கீர்த்தனைகளில் காணப்படவில்லையே...ஆர்.ஆர்.ஆர்.சார் !! அது ஏன்? விரக்தியின் விளிம்புகளில் நின்று எழுதுவது போல் தோணல் உண்டாகிறதே... அடுத்து எமக்காக 'ககனகுதூகல'த்தில் எழுதிப் பாருங்களேன்.... ப்ளீஸ்...
ReplyDeleteகதன குதூகல பாட்டுக்கு என் வோட்டும்..
ReplyDeleteஇரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
கீர்த்தனைக்கு நல்லதொரு ஸ்ருதி சேர்ப்பதாய் அமைந்துள்ளது தாங்கள் வெளியிடுள்ள அந்தப் படத்தில் உள்ளவரின் சிரித்த முகம்.
ReplyDelete